மதுரை கோரிப்பாளையத்தில் 13.4. 2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை மதுரை மாவட்டம் சார்பாக ஒன்றிய அரசு கொண்டுவந்த வக்ஃபு திருத்தச் சட்டத்தை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது..

இக்கண்டன பொதுக்கூட்டத்தை மதுரை மாவட்ட சபையின் தலைவர் மௌலானா S. சதக்கத்துல்லாஹ் மன்பஈ பாஜில் ஜமாலி தலைமை தாங்கினார்கள். மேலூம் மதுரை மாவட்ட அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளும், இஸ்லாமிய இயக்க நிர்வாகிகள் மற்றும் சமுதாய முன்னோடிகளும் முன்னிலை வகித்தார்கள்.
நிகழ்ச்சியை மதுரை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் செயலாளர் மௌலானா ஐ. முஹம்மது இப்ராஹிம் ஸாஅதி பாஜில் மழாஹிரி ஒருங்கிணைக்க மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விடுதலைச் சிறுத்தை கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு வே. கனி அமுதன் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை பேராசிரியர் திரு.அருணன் மதுரை மாவட்ட அரசு காஜியும் ஜே எம் எஸ் அரபுக் கல்லூரியின் தலைவருமான S.. சபூர் மொஹைதீன் மிஸ்பாஹி கண்டன உரையாற்றினார்கள்.
அதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் பொருளாளர் மௌலானா P.A.அகமது சாலிஹ் யூசுஃபி நன்றியுரையாற்றினார். இக்கண்டன பொதுக்கூட்டத்தில் ஆலிம் பெருமக்கள், இஸ்லாமிய பிரமுகர்களும் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் அனைத்து மதத்தை சகோதரர்களும் சமுதாய முன்னோடிகளும் பெருந்திரளாகவும் கலந்து கொண்டு தங்கள் கண்டனங்களை பதிவு செய்ததோடு மத்திய அரசு இச்சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
மதுரை மாவட்ட செய்தியாளர் : சின்னத்தம்பி