மதுரை நகர் அரிமா சங்கம், மு.ஷா.ச.வக்பு வாரிய கல்லூரி மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை உடன் இணைந்து நடத்தும் ரத்ததான முகாம் மற்றும் மரக்கன்று நடு விழா வைத்து முகாமை துவக்கி வைத்தவர் Ln C.விஜய் வீரப்பன் வட்டாரத் தலைவர் , அரிமா சங்கத் தலைவர் Ln M. ராமச்சந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார்.
வக்பு வாரிய கல்லூரியின் முதல்வர் பொறுப்பு Dr.V.வேலுச்சாமி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். முகாமினை அல் அமீன் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் Ln S. ஷேக் நபி அவர்கள் மு.ஷா.ச.வக்பு வாரிய கல்லூரியின், நாட்டு நல பணி திட்ட அலுவலர்கள் A.ஷேக் அப்துல்லா,J. முகமது மின்னா M.முகமது மின்னா S. யசோதை மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர் Ln C.தமிழ்குமரன், ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.
முகாமில் அரிமா சங்கத்தின் செயலாளர் Ln M.மாரியப்பன் , பொருளாளர் Ln S. அபுதாஹிர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
