திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதி உறுப்பினரான ஐ.பி.செந்தில்குமாரின் நேர்முக உதவியாளராக இருந்து வருபவர் லோகு என்ற லோகநாதன். பழனி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு மற்றும் திமுக கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
அதன்படி நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் மக்கள் பிரதிநிதியான எம்.எல்.ஏ செந்தில்குமார் கலந்து கொண்டு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார்.
அரசு மற்றும் திமுக கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாக செய்தியாளர்களுக்கு தகவல் வழங்க வேண்டியது சம்பந்தப்பட்ட நேர்முக உதவியாளரின் பொறுப்பாகும்.
அந்த வகையில் பழனியில் உள்ள குறிப்பிட்ட சில பத்திரிக்கை மற்றும் செய்தியாளர்களுக்கு மட்டும் தகவல் சொல்லும் அவர், எண்ணற்ற செய்தியாளர்களை புறக்கணித்து விடுகிறார்.
நிகழ்ச்சி நடக்கும் தகவல் தெரியாததால் எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு நேரடியாக செய்தி சேகரிக்க வரும் நிருபர்களிடம் அலட்சியம் காட்டுவதோடு, பேருந்து நிலையத்திற்குள் உள்ள பத்திரிக்கையாளர்கள் சங்கத்திடம் தகவல் சொல்லி விட்டதாக பதிலளிப்பதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால் பழனியில் உள்ள பத்திரிக்கை மற்றும் செய்தியாளர்களிடையே உதவியாளர் லோகு பிரிவினையை உண்டாக்குவதோடு எம்.எல்.ஏ ஐ.பி.செந்தில்குமார் செய்துவரும் பல்வேறு நலத்திட்ட பணிகளை மக்களிடம் கொண்டு செல்லவும் தடையாக இருந்து வருகிறார்.
பழனியில் ஒரு குறிப்பிட்ட நபர்கள் ஒன்றிணைந்து நடத்தப்படும் சங்கத்திற்கு முக்கியத்துவம் அளித்துவரும் உதவியாளர் லோகு , அதே பழனியில் உள்ள மற்ற பத்திரிக்கை மற்றும் செய்தியாளர்களை தொடர்ந்து புறக்கணிப்பதை வாடிக்கையாக்கி வருகிறார்.
இதனால் பழனியில் உள்ள செய்தியாளர்கள் மத்தியில் சமரசமற்ற சூழல் நிலவி வருகிறது.
எம்.எல்.ஏ ஐ.பி.செந்தில்குமார் உதவியாளர் லோகு என்பவரின் இதுபோன்ற தவறான செயல்பாடுகளால் பழனி தொகுதியில் நடக்கும் உண்மை நிலவரத்தை இதர பத்திரிக்கை மற்றும் செய்தியாளர்கள் தோண்ட ஆரம்பித்தால் ஆளும் திமுக எம்.எல்.ஏ செந்தில்குமாரின் நிலை கேள்விக்குறி தான்.? தொடர்ந்து நிருபர்கள் மத்தியில் விரோத போக்கை உருவாக்கும் உதவியாளர் லோகு என்பவரை பழனி எம்.எல்.ஏ எச்சரிக்கை செய்து அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் உரிய தகவல்களை வழங்கிட வழிவகை செய்திட வேண்டும் என நிருபர்கள் மத்தியில் கோரிக்கையாக எழுந்துள்ளது.
