தென்காசி டிசம்பர் 24-
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் பெற்றுக் கொண்டார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் நலவாரியத்தின் கீழ் இயற்கை மரணம் அடைந்த மாற்றுத்திறனாளிகளின் 10 வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.17,000/- வீதம் மொத்தம் ரூ.1,70,000/- மதிப்பிலான காசோலைகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வாசுதேவநல்லூர், தென்காசி, செங்கோட்டை வட்டாரங்களைச் சேர்ந்த 05 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு தலா ரூ.20.00 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.1 கோடிக்கான வங்கிக்கடன் இணைப்பிற்கான காசோலைகளையும், வாசுதேவநல்லூர், தென்காசி, ஆலங்குளம், கீழப்பாவூர், செங்கோட்டை என 05 வட்டாரங்களைச் சேர்ந்த ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு சமுதாய முதலீட்டு நிதி ரூ.27.00 இலட்சம் நிதி தொகையினையும், 07 பயனாளிகளுக்கு ரூ.2.90 இலட்சம் மதிப்பிலான தனி நபர் கடனுதவிக்கான காசோலைகளையும், 01 பயனாளிக்கு INSURANCE CLAIM PMJJBY திட்டத்தின் கீழ் ரூ.2.00 இலட்சத்திற்கான காசோலையினையும் என மொத்தம் 18 பயனாளிகளுக்கு ரூ. 1.31 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், தென்காசி நகரம் மங்கம்மாள் சாலை ஓரப்பகுதியில் ஆக்கிரமித்து குடியிருந்து வரும் 14 நபர்களுக்கு வருவாய்த்துறையின் மூலம் கல்லுாரணி குறுவட்டம் பாட்டாக்குறிச்சி கிராமம் அரசு புறம்போக்கு நிலத்தில் இலவச வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணைகளையும் என மொத்தம் 42 பயனாளிகளுக்கு ரூ.1.33 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், வழங்கினார்.
தொடர்ந்து, இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் தவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 705 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் அவர்கள் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர .ஜெயச்சந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) செல்வக்குமார், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) ஷேக் அயூப், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மதி இந்திரா பிரியதர்ஷினி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.