Headlines

நாகர்கோவில்: தொழிலதிபரை ஏமாற்றிய வழக்கில் மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனை !

நாகர்கோவில்: தொழிலதிபரை ஏமாற்றிய வழக்கில் மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனை !

செப் 4 கன்னியாகுமரி :

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரிடம் ரூ.10 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நாகர்கோவில் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.

நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் பாரதி நகரைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் சுப்பிரமணியம் என்பவர், அந்த தொழிலதிபரை பெரும் தொகை முதலீடு செய்வதாகக் கூறி ரூ.10 கோடி பணத்தை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட தொழிலதிபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கின் விசாரணை பல மாதங்களாக நடைபெற்றது. ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களை கவனித்து, குற்றம் நிரூபணமான நிலையில், நாகர்கோவில் நீதிமன்றம் சுப்பிரமணியத்திற்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து இன்று (செப்டம்பர் 4) தீர்ப்பு வழங்கியது.

நீதிமன்றத்தின் இத்தீர்ப்பால், தொழிலதிபர் மற்றும் அவரின் குடும்பம் நிம்மதி அடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *