பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியின் சார்பாக கல்லூரியின் 60 வது ஆண்டு கல்லூரி விளையாட்டு விழா கல்லூரி தாளாளர் மற்றும் செயலாளர் வழிகாட்டல் படி கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் ப.த ரவிசங்கர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். முன்னிலை வகித்தார். கல்லூரியின் தாளாளராக செயலாற்றி வரும் அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து அவர்கள் மற்றும் துணை ஆணையர் வெங்கடேஷ் விளையாட்டு விழாவிற்கு தலைமை தாங்கி கொடியசைத்து வைத்து, ஒலிம்பிக் சுடரேற்றி தலைமையுரையாற்றி, பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.

பழனி நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.எஸ். தனஞ்செயன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றி பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். மாணவ மாணவியர்களுக்கும் இருபால் பேராசிரியர்களுக்கும் தடகளப் போட்டிகள் மற்றும் குழு போட்டிகள் பல நடத்தப்பட்டன.
உடற்கல்வி இயக்குநர் முனைவர் அ.சக்திவேல் அவர்கள் விளையாட்டு விழாவை ஒருங்கிணைத்து நடத்தினர் . விளையாட்டு விழாவினை என்.சி.சி அதிகாரி முனைவர் பாக்கியராஜ் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரிகள் மாணவர்களின் அணிவகுப்பை ஏற்பாடு செய்தனர்.
