Headlines

பழனி PSKL Lilliputs Montessori பள்ளியின் 7-ஆம் ஆண்டு விழா: தமிழ்க் கலாச்சார முறைப்படி ‘VISHWA’26’ கோலாகலம்!

பழனி PSKL Lilliputs Montessori பள்ளியின் 7-ஆம் ஆண்டு விழா: தமிழ்க் கலாச்சார முறைப்படி 'VISHWA'26' கோலாகலம்!

பழனி | மார்ச் 26, 2026

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள PSKL Lilliputs Montessori பள்ளியின் 7-ஆம் ஆண்டு விழா, “VISHWA’26 – தமிழ் கலாச்சாரம்” என்ற கருப்பொருளில் (Theme) தனியார் மஹாலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மங்களகரமான தொடக்கம்
விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரை மங்கள வாத்தியங்கள் முழங்க உற்சாகமாக வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, குத்துவிளக்கேற்றி விழா முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது.

முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்பு
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரு.ஏங்கள்ஸ் ராஜா, மற்றும் திருமதி.தங்கம் ரமேஷ், ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தியாகி. திரு.PSKL.லட்சுமிபதி ராஜு அவர்களின் மருமகள் திருமதி.லோகநாயகி, பள்ளியின் கரஸ்பாண்டன்ட் திரு. PSKL. ராஜு, திருமதி.தீபா, மற்றும் பள்ளி முதல்வர் திருமதி.G.பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமதி.கல்யாணசுந்தாரி விழாவினை மிக சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

கலை நிகழ்ச்சிகளின் சங்கமம்
தமிழ்நாட்டின் கலை, கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் வகையில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன. 3 வயது முதல் 13 வயது வரையிலான மழலையர்கள் மற்றும் மாணவர்கள் பாரம்பரிய வண்ண உடைகளை அணிந்து மேடையில் அசத்தினர்.

பாரம்பரிய நடனங்கள்: தப்பாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, கரகம் மற்றும் ஒயிலாட்டம்.

பக்தி சங்கீதம்: தமிழ் கடவுள் முருகப் பெருமானின் புகழ் பாடும் பாடல்களுக்கு மாணவர்கள் ஆடிய நடனம் அனைவரையும் ஈர்த்தது.

மழலைகளின் இந்தத் திறமையான வெளிப்பாடுகள், விழாவிற்கு வந்திருந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை வெகுவாகக் கவர்ந்ததுடன், பாராட்டுக்களையும் குவித்தது. நன்றியுரை விழாவின் நிறைவாக ஆசிரியை திருமதி.மனோ ரஞ்சிதம் நன்றியுரை ஆற்றினார். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி முதல்வர் திருமதி. G. பத்மாவதி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மிக நேர்த்தியாகச் செய்திருந்தனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *