தென்காசி ஜனவரி 14
தென்காசி மாவட்டம் வல்லம் ஜமீன் ஊராட்சியில் தமிழக முதல்வர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆணைக்கு இணங்க சமத்துவ பொங்கல் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு வல்லம் ஜமீன் பஞ்சாயத்து தலைவி ஜமீன் பாத்திமா தலைமை வகித்தார் தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் சமத்துவ பொங்கல் ஆக அனைத்து மக்களாலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழரின் பண்பாடின்படி பொங்கல் பானையில் இயற்கையான பொருட்களை கொண்டு பொங்கல் படைக்கப்பட்டு அனைத்து மக்களுக்கும் பொங்கல் மற்றும் இனிப்புகள் பரிமாறப்பட்டன.
வல்லம் ஜமீன் ஊராட்சியில் பணி புரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் புத்தாடைகள் வழங்கப்பட்டு புதிய ஆடைகளை உடுத்திய மகிழ்ச்சியில் இந்த பொங்கலை சிறப்பாக கொண்டாடினர் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் வல்லம் திவான் ஒலி கலந்து கொண்டு அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தென்காசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கவாசகம் மற்றும் ஒன்றிய வளர்ச்சி அலுவலர் மாரியப்பன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முருகேசன் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சுந்தரி சிவகுமார் சையத் அலி பாத்திமா சங்கீதா முத்துமாரி செல்வி கனகராஜ் சாகுல் ஹமீது திவான் மைதீன் இசக்கி அம்மாள் முபாரக் அலி உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்டச் செய்தியாளர் முகமது இப்ராஹிம்.
