Headlines

திருச்செந்தூர் முருகனுக்கு மயில் மாலை குஜராத்திலிருந்து வந்ததாக பொய்யான தகவல் ஹரி நாடார் மனைவி மஞ்சு வேதனை.!

திருச்செந்தூர் முருகனுக்கு மயில் மாலை குஜராத்திலிருந்து வந்ததாக பொய்யான தகவல்ஹரி நாடார் மனைவி மஞ்சு ஆவேசம்.!

அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா நடைபெற்றது. முக்கிய நிகழ்வான இன்று சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர் கலந்து கொண்டனர். நடைபெற்ற நிகழ்ச்சியில் முருகனுக்கு மயில் இறகு மாலை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது முருகனுக்கு அணிவிக்கப்பட்ட மயில் இறகு மாலையை பற்றி அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.


கந்த சஷ்டி திருவிழாவின் தொடக்கத்திலிருந்து கடந்த ஒரு வார காலமாக சஷ்டி விரதம் மேற்கொண்டு முக்கிய நாளான சூரசம்காரம் நடைபெறும் நாளில் முருகனுக்கு அலங்காரம் செய்யப்பட்ட மயில் இறகு மாலை 2200 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் குஜராத்தில் இருந்து கொண்டுவரப்பட்டதாக தனியார் தொலைக்காட்சி சேனல் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பிரபலமான ஹரி நாடார் அவர்களின் மனைவி தேனியில் இருந்து சஷ்டி விரதத்தில் நான்காம் நாள் அன்று திருச்செந்தூர் முருகனுக்கு அணிவித்து அலங்காரம் செய்ய எடுத்து வரப்பட்டதாக கூறியுள்ளார். மாலை ஆனது முழுக்க முழுக்க தேனி பகுதியில் முருகனுக்காக உருவாக்கப்பட்டு இத்தளத்திற்கு கொண்டுவரப்பட்டது.

மயிலிறகு மாலை 2200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குஜராத்தில் இருந்து கொண்டுவரப்பட்டதாக பொய்யான தகவலை பரப்பி வருவதாக ஹரி நாடாரின் மனைவி மஞ்சு ஹரி நாடார் என்பவர் தற்போது அதிர்ச்சியான தகவலை கூறியுள்ளார். முருகனுக்கு அணிவிக்கப்பட்ட மாலையானது உண்மையிலேயே அவரது சொந்த ஊரான தேனியிலிருந்து விவரம் இருந்து மாலையை தயாரித்து திருச்செந்தூர் கோவிலுக்கு கொண்டு வந்துள்ளதாகவும், இதனை சில மர்ம நபர்கள் தவறான தகவலை உண்மைக்கு புறம்பாக வெளியிட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதுசம்பந்தமாக இந்துசமய அறநிலையத்துறை தெளிவான விசாரணை மேற்கொண்டு போலியான தகவலை வெளியிட்ட தொலைக்காட்சி மீதும், குஜராத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாக பொய்யான தகவலை வெளியிட்ட நபர்கள் மீதும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *