இந்நிகழ்வில் மெட்ராத்தி ஊராட்சி மன்ற தலைவர் பி.எஸ். தங்கராஜ் அவர்கள் தலைமையில், எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை நிறுவனர் திரு எஸ்.ஏ.ஐ.நெல்சன் அவர்கள் மற்றும் அறக்கட்டளையின் உறுப்பினர் திரு டி.சிவலிங்கம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட கவுன்சிலர் மடத்துக்குளம் திருமதி.லதாபிரியா ஈஸ்வரசவாமி அவர்களும், ஒன்றிய குழு தலைவர் மடத்துக்குளம் செல்வி.காவியா ஐயப்பன் அவர்களும், மெட்ராத்தி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திரு வே.பாலசுப்பிரமணியம் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்வின் சமூக ஆர்வலர் திரு பி.எஸ்.டி கௌதம் ராஜ் அவர்கள் நன்றியுரை வழங்கினார். உடன் தலைமை மருத்துவர் திரு எம்.கார்த்திகேயன் அவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களும் கலந்து கொண்டனர். மெட்ராத்தி ஊராட்சி பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு (ECG,ECHO, BLOOD SUGAR), ஆஞ்சியோகிராம் எம்.ஆர்.ஐ., சி டி மார்பக ஸ்கேன் (மேமோகிராம்) போன்ற சிகிச்சைகளை பெற்றுக் கொண்டனர். உடன் மெட்ராத்தி ஊராட்சி உறுப்பினர்கள் அண்ணலட்சுமி, அன்னபூரணி, செல்வி அவர்களும் கலந்து கொண்டனர்.
உடுமலை : நிருபர்: மணி