மதுரை கே.கே.நகரைச் சேர்ந்தவர் மணிமாறன்(65). தினபூமி நாளிதழ் உரிமையாளர். இவரது மகன் ரமேஷ்45). இவர்கள் இருவரும் இன்று திருநெல்வேலியில் இருந்து மதுரைக்கு காரில் சென்றனர்.
காரை ரமேஷ் ஓட்டினார். நான்குவழிச்சாலையில் நாலாட்டின்புதூர் மேம்பாலத்தை கடந்து வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி, அதையும் கடந்து எதிர்புறம் உள்ள சாலைக்கு சென்று, எதிரே வந்த சுமை வாகனத்தின் மோதியது. விபத்தில் சம்பவ இடத்திலேயே மணிமாறன் உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற நாலாட்டின்புதூர் போலீஸார், காயமடைந்த சதீஷை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். மணிமாறன் சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரமேஷுக்கு காயம் ஏற்பட்டது. லேசான காயமடைந்த சுமை வாகன ஓட்டுநர் தேரையூர் தாலுகா சாட்டூரைச் சேர்ந்த அசோக்குமார்(28) அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து நாலாட்டின்புதூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.