திருநெல்வேலி,அக்.29:-
“சாதிய எண்ணம் கொண்டவன் அரசியலுக்கு வந்தால், நாடு நாசமாகிவிடும்!” என்று முழங்கிய, “தெய்வத்திருமகனார்” பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவரின், 63-ஆம் ஆண்டு “நினைவு” தினத்தை (அக்டோபர்.30) முன்னிட்டு, திருநெல்வேலி பாளையங்கோட்டை மகாராஜா நகரில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவப் படத்திற்கு, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மண்டல தலைவர் தோழர் கண்மணி மாவீரன் வேளாளர் தலைமையில், “மலர் மாலை” அணிவித்து, “மரியாதை” செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வின் போது, “திருநெல்வேலி சந்திப்பில் உள்ள, “அண்ணல்” அம்பேத்கர், “மகாகவி” சுப்பிரமணிய பாரதியார்,”பசும்பொன்” முத்துராமலிங்கத்தேவர் ஆகியோரின், சிலைகளை சுற்றியுள்ள, இரும்பு கம்பிகளால் ஆன கூண்டுகளை, உடனடியாக அப்புறப்படுத்திட வேண்டும்!”- என, தமிழ்நாடு அரசையும், நெல்லை மாவட்ட நிர்வாகத்தையும், கேட்டுக்கொள்ளும், “தீர்மானம்” நிறைவேற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சீயோன் தங்கராஜ், “மயோபதி” சிறப்பு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ராமசாமி. த.ம.மு.க. நிர்வாகிகள் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் இளைஞர் அணி தலைவர் மணிமாறன், மோகன்மள்ளர். சர்மிளா, தங்கராஜ் பாண்டியன், குமார் பாண்டியன் . பவள முத்து, “வழக்கறிஞர்” சுதர்சன், பீட்டர், நடராஜன், துரைசாமி தேவர், சுந்தரலிங்கம் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன், ஆறுபங்கு நாட்டார் மக்கள் நலச்சங்க தலைவர் துர்க்கை லிங்கம், “புரட்சி பாரதம்” கட்சி மாவட்ட செயலாளர் “களக்காடு” A.K.நெல்சன், மாவட்ட பொருளாளர் முகமது ஹாசீர், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் முத்து வீரன், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக மாவட்ட செயலாளர் மணி பாண்டியன், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்
செல்வ குமார், சுரேஷ் குமார், மோகன் குமார், முத்து குமார். “சிவந்திப்பட்டி” சேரன் துரை, விஜயகுமார். மணிகண்டன், முருகன் ஆகியோர் உட்பட, பலரும் கலந்து கொண்டு, முத்து ராமலிங்க தேவருக்கு “வீரவணக்கம்” செலுத்தினர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.
