Headlines

ஜப்பானை சேர்ந்த முருக பக்தர்களின் வேல் தீர்த்த யாத்திரை, பழனியில் புலிப்பாணி சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.

ஜப்பானை சேர்ந்த முருக பக்தர்களின் வேல் தீர்த்த யாத்திரை, பழனியில் புலிப்பாணி சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஸ்ரீமத் போகர் பழனி ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமையில் ஜப்பானை சேர்ந்த முருக பக்தர்களின் வேல் தீர்த்த யாத்திரை நடைபெற்றது.

முன்னதாக இந்நிகழ்வில் ஜப்பானை சேர்ந்த 50 முருக பக்தர்கள் புலிப்பாணி ஆசிரமத்தில் இருந்து பால்குடம் ஏந்தியவாறு யாத்திரியை தொடங்கி, திரு ஆவினன்குடி முருகனை தரிசித்து பாலபிஷேகம் செய்தனர்.

தொடர்ந்து மாலை வேலையில் நடைபெற்ற தேர் திருவிழாவில் தேர் இழுத்து மாரியம்மனுக்கு நடைபெறும் மாசி திருவிழாவில் தேர் இழுத்து தீச்சட்டி எடுத்தனர்.

இறுதியாக புலிப்பாணி ஆசிரமம் சென்று தங்கள் யாத்திரையை நிறைவு செய்தனர். மேலும் இந்நிகழ்வில் கோபால் பிள்ளை சுப்பிரமணியம் மற்றும் ஆசிரமத்தை சேர்ந்த சுவாமிகள், மற்றும் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பழனி செய்தியாளர் நா.ராஜாமணி

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *