தென்காசி ஜனவரி 13-
தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியில் அமைந்துள்ள நேஷனல் பப்ளிக் ஸ்கூலில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு தாளாளர் அப்துல் மஜீத் தலைமை தாங்கினார் .பள்ளியின் முதல்வர் சித்தீக்கா பர்வீன் வரவேற்று பேசினார் இந்நிகழ்ச்சியில் விழுதுகள் சேகர் முதுபெரும் செய்தியாளர் முகமது அலி என்ற பேபி முன்னிலை வகித்தனர் சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் சிறுபான்மை ஆணைய துணைத் தலைவர் இறையன்பன் குத்தூஸ் கலந்து கொண்டு சமத்துவ பொங்கலுக்கு வாழ்த்துக்கள் கூறினார் பாரம்பரிய விளையாட்டுகளான நுங்கு வண்டி பலூன் ஊதி உடைத்தல் ஆணழகன் போட்டி கோலிகுண்டு விளையாடுதல் இன்னும் பல போட்டிகளை துவக்கி வைத்த சிறுபான்மை ஆணைய துணைத் தலைவர் இறையன்பன் குத்தூஸ் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வல்லம் திவான் ஒலி மற்றும் ஏராளமான மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள் பரிசு வென்று சென்றது அனைவரும் மத்தியில் மகிழ்ச்சி ஏற்படுத்தியது.