தென்காசி மாவட்டம் முக்கூடலைச் சேர்ந்தவர் சந்திரசேகர். சமூக ஆர்வலரான இவர் பனை விதை நடும் நிகழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இதுவரை தம் சொந்த முயற்சியில் 1 லட்சத்து 50 ஆயிரம் பனை விதைகளை நட்டுள்ளார். எவ்விதமான உதவியும் எதிர்பார்த்து செய்யாமல் தனது மன மகிழ்விற்காக இப்பணிகளை செய்து வருகிறேன் என்று கூறி வரும் இவர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார் பனை விதை நடுதலில் அவரின் ஆர்வம் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது பொதுமக்களின் நலனுக்காக பனைமரம் விதைகள் நடும் பணிகளை முன்னெடுத்து பல்வேறு பள்ளிகளிலும் ஆற்றங்கரை ஓரங்களிலும் இதை செய்து வருவதாகவும் இதில் ஏற்படும் திருப்தி வேறு எதிலும் தமக்கு கிடைப்பதில்லை என்றும் இது போன்ற பணிகளில் இளைஞர்களும் மாணவர்களும் சமூக ஆர்வலர்களும் முன் வர வேண்டும் என்றும் நம்முடைய பூமியை நான் தான் பாதுகாக்க வேண்டும் என்று உரக்கச் சொல்லும் இவர் இந்த மண்ணின் மிகப்பெரிய சொத்தாக கருதப்படுகிறார் இவரை இந்த ஊர் பொதுமக்களும் மாணவர்களும் தனது ரோல் மாடலாக நினைத்து கொண்டாடி வருகின்றனர் அதன் வரிசையில் இவரை சந்தித்த இந்து நடுநிலைப்பள்ளி அரிகேசவநல்லூர் தலைமையாசிரியர் ராமச்சந்திரன் சந்திரசேகர் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் பின்னர் தங்களது பள்ளியில் மாணவர்களுக்கு பனைமரத்தின் பண்புகள் குறித்து விளக்க வேண்டும் என்று பள்ளிக்கு வருகை தர கோரிக்கை விடுத்தார் இந்நிகழ்வில் ஊர் பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி செய்தியாளர் : முகமது இப்ராகிம்