கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம், 80-வது வார்டுக்கு உட்பட்ட உப்பு மண்டி வீதி, கெம்பட்டி காலனி பகுதியில், பொதுமக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் தூய்மை இந்தியா (2.0) (ஸ்வச் பாரத் மிஷன்-SBM) திட்டத்தின் கீழ் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பொதுக் கழிப்பிடங்கள் திறப்பு விழா இன்று காலை,சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ப. ராஜ்குமார் மற்றும் மாண்புமிகு மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கி, புதிய கட்டிடங்களை ரிப்பன் வெட்டி பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப. முன்னிலை வகித்தார்.
மேலும், 80-வது வார்டு மாமன்ற உறுப்பினரும், பொது சுகாதாரக் குழுத் தலைவருமான பெ.மாரிசெல்வன் அவர்கள் உடனிருந்து சிறப்பித்தார்.
புதிதாகத் திறக்கப்பட்டுள்ள இந்த பொது கழிப்பிடங்கள் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலும், சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவில் மாநகராட்சி அலுவலர்கள், பகுதி பொறுப்பாளர் என்.ஜே.முருகேசன் ,வார்டு செயலாளர் நா.தங்கவேலன், கழக நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்ட,செய்தியாளர்-சம்பத் குமார்.
