திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செல்வம், லாரன்ஸ், கண்ணன் உள்ளிட்டோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த தியாகராஜன் என்பவரை நிறுத்தி சோதனையிட்டபோது அவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை எடுத்துச் செல்வது தெரிய வந்தது இதைத்தொடர்ந்து அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 180 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது இவற்றை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்து தியாகராஜனுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தனர்.
மேலும் தியாகராஜன் நத்தம் பேருந்து நிலையம் பகுதியில் கடை வைத்து நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது