வாணியம்பாடி,
சென்னையை சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கு கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த ரோகினி (வயது 30) என்பவருக்கு திருமணம் முடிந்து இரண்டரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. ராஜேஷ் கேரளாவில் பால் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் சென்னையில் உள்ள ராஜேஷின் தந்தை பார்ப்பதற்காக திருச்சூரில் இருந்து கணவன் மனைவி இருவரும் திருவனந்தபுரம் விரைவு ரயிலில் நேற்று இரவு சென்னைக்கு புறப்பட்டனர்.
ரயில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது ராஜேஷ் மற்றும் ரோகிணி இருவரும் ரயிலில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளனர்.
பின்னர் ராஜேஷ் மட்டும் இருக்கைக்கு திரும்பிய நிலையில் வெகு நேரம் ஆகியும் ரோகிணி இருக்கைக்கு வராததால் சந்தேகம் அடைந்த ராஜேஷ் இது குறித்து காட்பாடி ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் காட்பாடி ரயில்வே காவல்துறையினர் மற்றும் ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் ரோகினியை தேடி வந்தனர். அப்போது வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ரோகினி ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது,
இதனை தொடர்ந்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் ரோகினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
