நீலகிரி மாவட்ட மோட்டார் வாகன பழுது பார்க்கும் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம்.
இன்று மே தினத்தை முன்னிட்டு மாவட்ட மோட்டார் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம் உதகை கிரீன் ஃபீல்ட் பிலோமினா துவக்கப் பள்ளியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் தொடக்கத்தில் ஜெல் மெமோரியல் பள்ளி மாணவியின் சிலம்பாட்டத்துடன் தொடங்கப்பட்டது. இதில் பி வினோத்குமார்,எச் ஜார்ஜ்,எல் மைக்கேல் தலைமையில் சங்கத்தின் வரவு செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டன இந்த நிகழ்வில் மோட்டார் வாகன பழுது பார்க்கும் தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் முடிவில் கலை நிகழ்ச்சி உடன் விழா நிறைவு பெற்றது.
