Headlines

தென்காசி தெற்கு மாவட்ட திமுக மேற்கு ஒன்றியம் சார்பாக பாக முகவர்கள் கூட்டம் கொட்டா குளம் சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு தென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் திவான் ஒலி தலைமை தாங்கினார்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக மேற்கு ஒன்றியம் சார்பாக பாக முகவர்கள் கூட்டம் கொட்டா குளம் சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு தென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் திவான் ஒலி தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சிக்கு மேலிட பார்வையாளராக வழக்கறிஞர் நௌஷாத் கலந்து கொண்டு பாக முகவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார் பாக முகவர்களாக இருக்கக்கூடியவர்கள் வேறு எந்த பதவியிலும் இருக்கக் கூடாது என்றும் தலைமையின் அறிவுறுத்தலின்படி அதிகார குவியலை தடுக்கும் வண்ணமாக ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் செயல்பட வேண்டும் என்றும் வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளை வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட வேண்டும் என்றும் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த முறை தவறவிட்ட தொகுதியை இந்த முறை திமுக வசமே பெறப்பட்டு 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்றும் அதற்கு அனைத்து கடைகோடி தொண்டர்களும் தீவிரமாக களப்பணி ஆற்ற வேண்டுமென்றும் எந்த வேறுபாடுகள் இருந்தாலும் அதை புறந்தள்ளி வைத்துவிட்டு கட்சியின் கட்டுப்பாட்டிற்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார் இந்நிகழ்வில் தென்காசி ஒன்றிய குழு சேர்மன் ஷேக் அப்துல்லா தலைமை செயற்குழு உறுப்பினர் ஷேக் தாவுது செல்லத்துரைமாவட்ட தொண்டரணி அமைப்பாளர் இசக்கிபாண்டியன் மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் வேலுச்சாமி ஷபிக் அலி கிளைச் செயலாளர் ரமேஷ் ராமையா ராஜா முத்துக்குமார் செல்வம் முருகன் ஈஷா முஹம்மது ஜஹாங்கீர் சிவன் பாண்டியன் சரவணன் ராமர் பரமசிவம் முருகேசன் பெரிய புள்ள வலசை முருகேசன் சுதாகர் வேலுச்சாமி திவான் ஒலி வலைதள மாவட்ட பொறுப்பாளர் ஹபீப் நிஷா ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ரபிக் காசியார் உட்பட ஏராளமான திமுகவினரும் பாக முகவர்களும் கலந்து கொண்டனர்.

தென்காசி மாவட்ட செய்தியாளர் : முகமது இப்ராகிம்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *