குன்னூர் : அக்டோபர் : 14
ரேலியா டேம் நீர்மட்டம் குறைந்த நிலையில் வறண்ட பகுதியில் தேங்கியுள்ள சேறு சகதிகளை அகற்றீ நீர்நிலையை ஆழப்படுத்தும் பணிகள் நடைபெற்றுவருகிறது.
குன்னூர் நகராட்சிக்கு சொந்தமான ரேலியா டேம் நீர்மட்டம் குறைத்துள்ளதை நகராட்சி ஆணையாளர் இளம்பரிதி தலைமையில் நகராட்சி பொறியாளர், பணி மேற்பார்வையாளர் மற்றும் ஒப்பந்ததாரருடன் இணைந்து சமீபத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
கடந்த மாதங்களில் மழை இல்லாத காரணத்தால், தற்போதைய நீர் இருப்பு 43 அடியிலிருந்து 20 அடியாக குறைந்துள்ளது. தற்போது, ரேலியா டேமிலிருந்து நகராட்சிக்கு தினமும் 1 MLD மட்டுமே குடிநீர் பெறப்படுகிறது. மீதமுள்ள 4.5 MLD குடிநீர், எமரால்டு கூட்டு குடிநீர் திட்டம், கரன்சி குடிநீர் திட்டம் மற்றும் உள்ளூர் நீராதாரங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
வரும் நாட்களில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இரண்டு நாட்கள் தொடர்ந்து மழை பெய்தாலே, ரேலியா டேம் விரைவில் நிரம்பும் நிலை ஏற்படக்கூடும்.
எனினும் எதிர்கால குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு இந்த வறண்ட சூழ்நிலையை ஒரு வாய்ப்பாகக் கொண்டு, தற்போது வறண்டுள்ள நீர்நிலைப் பகுதிகளில் தேங்கியுள்ள சேறு மற்றும் சகதிகளை அகற்றிக் அந்த பகுதிகளை மேலும் ஆழப்படுத்தி அதிகளவு நீர் சேமிக்கக்கூடிய வகையில் பணி மேற்கொள்ள அரசு நிதியை எதிர்பார்த்து காலம் தாழ்த்தாமல் நகராட்சி பொதுநிதியிலே மேற்காணும் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டு
தற்போது தூர்வாரும் பணிகள் போர்கால அடிப்படையில் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. அதனை ஆணையாளர் ஆய்வு செய்து ஒப்பந்ததாரருக்கு பருவமழை வருவதற்குள் பணிகளை விரைந்துமுடிக்க உத்தரவிட்டார்.
