காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.பிரபாகரன், திரு.சண்முகம் ஆகியோர் ரோந்து பணியில் இருந்த போது விழுப்புரம் பழைய நகராட்சி பூங்கா அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை சோதனை செய்ததில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை கண்டறிந்து நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் எதிரி விழுப்புரம் அகரம் பேட்டை நடராஜர் என்பவரின் மகன் நிர்மல் குமார் (23) என தெரியவந்தது மேலும் எதிரியிடம் இருந்து சுமார் 100 கிராம் எடை கொண்ட கஞ்சா, பணம் ரூபாய் 3000/- மற்றும் இருசக்கர வாகனம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விழுப்புரம் நகர காவல் நிலையம்..கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது..!
