திருநெல்வேலி,ஜன.11:-தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, திருநெல்வேலி கிழக்கு மாவட்டதிமுக செயலாளரும், முன்னாள் தமிழக சபாநாயகருமான இரா. ஆவுடையப்பன் ஆலோசனையின் பேரில், நாங்குநேரி மேற்கு ஒன்றியம் தளபதி சமுத்திரம் சுப்புலட்சுமி திருமண மண்டபத்தில் வைத்து, இன்று [ஜனவரி.11] காலையில், நாங்குநேரி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.எஸ். சுடலை கண்ணு தலைமையில், BLA2,BLC பூத் பாக முகவர்கள் கலந்து கொண்ட “கலந்தாய்வு கூட்டம்” நடைபெற்றது.
கூட்டத்தில், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி மேலிட பார்வையாளரும், தமிழக இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் அமைச்சருமான, என்.சுரேஷ் ராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, 2026-சட்டமன்றத் தேர்தல் பணிகள் சம்பந்தமான கருத்துக்களை எடுத்துக்கூறி, “சிறப்புரை” யாற்றினார். நாங்குநேரி ஒன்றிய திமுக அவை தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதி எஸ்.கே. ஆறுமுகம், மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் சந்திரகலா, மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கே.பி. சங்கர் மற்றும் நாங்குநேரி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளை செயலாளர்கள், BLA2, BLC பொறுப்பாளர்கள் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டு, கருத்துகளை பதிவு செய்தனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.