Headlines

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டம் திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டம் திரும்ப பெற வலியுறுத்தி

வக்ஃபு வாரியத்தில் இஸ்லாமிய மதத்தை சேராத இரண்டு நபர்களை சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு கூறுகிறார்கள், திருப்பதி தேவஸ்தானத்தில் இஸ்லாமியர்களை சேர்க்க முடியுமா.

வாணியம்பாடியில் நடந்த வக்ஃப் வாரிய திருத்தச் சட்டம் திரும்ப பெற வலியுறுத்தி நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கேள்வி எழுப்பினார்.

வாணியம்பாடி, ஏப்.14-

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் அருகில் ஆல் இந்தியா முஸ்லீம் பர்சனல்-லா போர்டு, திருப்பத்தூர் மாவட்ட ஜமாத்துல் உலமா சபை சார்பில் பல்வேறு
அரசியல் கட்சிகள், இஸ்லாமிய கூட்டமைப்பு இணைந்து மத்திய பாஜக அரசு கொண்டுவரப்பட்ட
வக்ஃப் வாரிய திருத்தச் சட்டம் திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு திருப்பத்தூர் மாவட்ட அரசு காஜி மௌலானா மௌலவி ஹாபிஸ் சையத் அப்துர் ரஹ்மான் தலைமை வகித்தார்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆ.செ.வில்வநாதன், வாணியம்பாடி நகர திமுக செயலாளர் வி.எஸ்.சாரதி குமார், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட செயலாளர் கே.பி.எஸ். மாதேஸ்வரன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குமரி மகாதேவன், மதிமுக ஆவடி அந்தரிதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்னிய அரசு, இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாநில செயலாளர் ஹெச்.அப்துல் பாசித், வெல்ஃபேர் கட்சி மாநில தலைவர் கோவை அப்துல் ரஹ்மான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஆம்பூர் நஜீர் அஹமத், சிபிஐ கட்சி நிர்வாகி எம்‌.சுந்தரேசன், சிபிஎம் கட்சி கே. சாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

கூட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் எம்பி பேசியதாவது:-

இந்தியாவை மதத்தை வைத்து பிளவு படுத்தி பார்க்ககூடிய அதிபயங்கரசக்தி தற்போது ஆட்சி ஆண்டு கொண்டுள்ளது, அந்த சக்தி எங்கு வேண்டுமானாலும் எடுப்படலாம், ஆனால் தமிழ்நாட்டில் எடுப்படாது.

வக்ஃபு வாரியத்தில் இஸ்லாமிய மதத்தை சேராத இரண்டு நபர்களை சேர்க்க வேண்டும் என மத்திய அரசு கூறுகிறார்கள், இந்துவாக பிறந்த நான் கேட்கிறேன், திருப்பதி தேவஸ்தானத்தில் இஸ்லாமியர்களை சேர்க்க முடியுமா, நீங்கள் தாயாரா? அப்படி கொடுத்தால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உங்களுக்கு கொடுத்த ஆதவரை 5 நிமிடத்தில் விலக்கிகொள்வார்.

மதச்சார்பின்மையை பற்றி நீங்கள் பேசுகிறீர்கள், பேச வேண்டியவர்கள் நாங்கள், இதுவரையில் வக்ஃபு வாரியம் தொடர்பாக சண்டை வந்ததில்லை, இவர்களாகவே உருவாக்குகிறார்கள்,

வக்ஃபு வாரிய பிரச்சனை தொடர்பாக மாவட்ட கலெக்டர் தீர்த்து வைத்து அதனை அரசு சொத்தாக அறிவிப்பர் என மத்திய அரசு கூறுகிறது.

இந்தியாவில் எவ்வளவு பிரச்சனை உள்ளது, அமைதியாக உள்ள இஸ்லாமியர்களை சீண்டுகிறது மத்திய அரசு, மத்திய அரசு இந்த சட்டத்தை திரும்ப பெரும் வரையில் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நான் குரல் கொடுப்பேன் இவ்வாறு அவர் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தை கட்சி, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்சிஸ் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய ஜனநாயக கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல். முஸ்லிமீன் கட்சி, வெல்ஃபர் பார்ட்டி ஆப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகளும், ஜமாத் அமைப்புகளும் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கண்டன ஆர்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முடிவில் மதிமுக நகர செயலாளர் ஏ. நாசீர் கான் நன்றி கூறினார்.

அப்சர் மர்வான் : திருப்பத்தூர் மாவட்ட நிருபர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *