Headlines

நீதிமன்ற உத்தரவு என்ன ஆனது? பிளக்ஸ் பேனர் வைப்பதில் பழனி நகராட்சிக்கு காவல்துறை உதவியா?

நீதிமன்ற உத்தரவு என்ன ஆனது? பிளக்ஸ் பேனர் வைப்பதில் பழனி நகராட்சிக்கு காவல்துறை உதவியா?

பழனி நகராட்சியின் முக்கிய இடங்களில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் சார்பாகவும், அரசியல் கட்சிகள், தனியார் பள்ளிகள் சார்பாக விளம்பர பிளக்ஸ் பேனர்கள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மயில் ரவுண்டானா, திண்டுக்கலில் இருந்து பழனி பேருந்துநிலையம் வரும் பிரதான சாலை, டிராவல்ஸ் பங்களா , EB கார்னர் போன்ற பல முக்கிய இடங்களில் அதிகமான பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. விளம்பர பேனர்களை வைப்பதற்கு நகராட்சி அலுவலகத்தில் அனுமதி பெறுவதற்கு என சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நீதிமன்ற உத்தரவு என்ன ஆனது? பிளக்ஸ் பேனர் வைப்பதில் பழனி நகராட்சிக்கு காவல்துறை உதவியா?
நீதிமன்ற உத்தரவு என்ன ஆனது? பிளக்ஸ் பேனர் வைப்பதில் பழனி நகராட்சிக்கு காவல்துறை உதவியா?

பிளக்ஸ் பேனர்கள் வைப்பதற்கு நகராட்சி நிர்வாகத்தில் அதற்கான பணத்தை செலுத்தி முறையாக அனுமதி பெறப்பட்ட பின்னரே பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட வேண்டும். இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் சார்பாக ஒரு பிளக்ஸ் பேனர்களை வைப்பதற்கு என கால அவகாசம் ஆறு நாட்கள் என நிர்ணயம் செய்துள்ளதாக நகராட்சி நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், பழனி நகராட்சியில் ஒருசில தனியார் நிறுவனத்தின் பிளக்ஸ் பேனர்கள் இரண்டு மாதங்களாக வைக்கப்பட்டிருப்பது குறித்து புகார் எழுந்துள்ளது. குறிப்பாக விவாஹா திருமண மண்டபத்திற்கு சொந்தமான பிளக்ஸ் பேனர் இரண்டு மாதங்கள் ஆகியும் இதுவரை அப்புறப்படுத்தாமல் நேற்று மாலை பேனர்கள் அகற்றப்பட்ட நிலையில் நகராட்சி நிர்வாகம் ஒருசிலருக்கு மட்டும் அதிக நாட்கள் பேனர்களை வைப்பதற்கு எப்படி அனுமதிக்கிறது என்று கேள்வியும் எழுந்துள்ளது. நகராட்சி நிர்வாகத்திற்கு பணம் செலுத்தி அனுமதி பெற்றிருந்தாலும், பழனி நகர காவல்துறைக்கு தனியாக பேனர்களை வைக்க கப்பம் கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.அப்படி கப்பம் கட்டவில்லை என்றால் பிளக்ஸ் பேனர்களை அப்புறப்படுத்த காவல்துறை சார்பில் தொல்லை கொடுப்பதாகவும் கூறுகின்றனர். இந்நிலையில் விவாஹா மண்டபத்தின் விளம்பர பேனரை கூடுதலாக வைப்பதற்கு காவல்துறை, நகராட்சி நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும், பழனி நகரம் முழுவதும் நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் 1000 ரூபாய் பிளக்ஸ் பேனர்களை வைப்பதற்கு பத்தாயிரம் ரூபாய் வரை பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுவதாக தனியார் நிறுவனத்தை சேர்ந்த சிலர் வேதனை தெரிவிக்கின்றனர். ஆனால், பிளக்ஸ் பேனர்கள் வைப்பதற்கு அரசியல் கட்சியினருக்கு அப்படி எந்தவித நிபந்தனைகளும் இல்லை என்றாலும் , பணம் செலுத்தி பேனர்கள் வைப்பவர்களை விட அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் முக்கிய சாலை ஓரங்களில் மாதக்கணக்கில் கட்சியின் விளம்பர பேனர்களை வைப்பதால் பொதுமக்கள் , வாகன ஓட்டிகள் என பலர் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதுபோக பொதுமக்கள் நடந்து செல்லும் வழித்தடத்தை அடைத்து பிளக்ஸ் பேனர்கள் வைப்பதால் நடந்து செல்லும் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. விளம்பர பேனர்கள் வைப்பதால் பல்வேறு விபத்துகள் ஏற்படுவதோடு சில நேரங்களில் உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. நகராட்சி நிர்வாகம் பிளக்ஸ் பேனர்கள் வைப்பதற்கு என ஒரு சில இடங்களை ஒதுக்கி இருந்தாலும் அந்த இடத்தில் பேனர்களை வைப்பதில்லை. மேலும் நகராட்சி , காவல்துறை ஆகிய இரண்டு துறைக்கும் பணம் செலுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. அரசு துறைகள் இதுபோன்ற தவறான செயல்பாடுகளுக்கு துணைபோகமாலும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்காத வகையிலும் நிர்வாகத்தை நடத்திட வேண்டும் என்பதே தற்போது பலருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *