உடுமலை, அக்டோபர் 11-
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வட்டத்துக்குட்பட்ட ஹனிபஞ்ச் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் போஷன் மா ஊட்டச்சத்து மாத நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ஸ்ரீமதி மீனா மெய்யப்பன் மற்றும் முதல்வர் சத்தியவதி ஆகியோர் தலைமை வகித்தனர் மற்றும் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் வீணா ஊட்டச்சத்து பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு துரித உணவுகள் மற்றும் சத்தான உணவுகளை பற்றி விழிப்புணர் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அங்கன்வாடி பணியாளர்கள் பாடல்கள் ,நடனம், விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் நம் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையின் நிறுவனர் எஸ். ஏ.ஐ நெல்சன் சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
