Headlines

நீலகிரி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஆர்டர்லி பகுதியில் காட்டு யானை தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது தலைமை அரசு கொறட கா.ராமச்சந்திரன் உதவித்தொகை வழங்கினார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஆடர்லி சேம்பக்கரை பகுதியில் வசித்து வரும் குரும்பர் இனத்தைச் சேர்ந்த விஜயகுமார் வயது 33, நேற்று 9.3.2025 இரவு சுமார் 8.45 மணி அளவில் ஆர்டர்லி பேருந்தில் இருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து செல்லும் வழியில் யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

இச்செய்தியினை கேள்விப்பட்ட குன்னூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக அரசின் தலைமை கொறடாவுமான கா.ராமச்சந்திரன் குன்னூர் லாலி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று இறந்தவரின் உடலுக்கு மரியாதை செலுத்தி, இறந்தவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

மேலும் குன்னூர் லாலி அரசு மருத்துவமனையில் இறந்தவரின் உடற்கூறு ஆய்வு முடியும் வரை பிணவரையின் அருகில் அமர்ந்து, உடற்கூறு ஆய்வு முடிந்த பிறகு பூத உடலை பெற்று சேம்பக்கரை கிராம மக்களிடம் ஒப்படைத்து, தமிழக அரசின் சார்பில் தற்போது நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியில் வன விலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் இறுதி சடங்கிற்கு முன்பணமாக ரூபாய்50 ஆயிரத்திற்கான தொகையினை குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தலைமை அரசு கொறடா கா. ராமச்சந்திரன் வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் இறந்தவர் குடும்பத்தினருக்கு வழங்கினார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் மீதித் தொகையினை விசாரணை முடிந்த பிறகு வழங்கப்படும்.
வனத்துறை அதிகாரிகள் இறந்தவரின் உடலை பாதுகாப்பாக அவரது கிராமத்திற்கு எடுத்துச்சென்று இறுதி சடங்குகள் முடியும் வரையில் இருந்து திரும்புவார்கள் என தெரிவித்தார் உடன் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *