செப் 9 கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று பலமாக வீசுவதால் காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
குமாரபுரம், ஆரல்வாய்மொழி, காவல்கிணறு, செண்பகராமன் புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள காற்றாலைகள், தற்போது அதிகபட்ச திறனில் இயங்கி வருகின்றன. 230 கிலோவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய காற்றாலைகள், தற்போது 220 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம், மாவட்டத்தில் மின் உற்பத்தி அதிகரித்து மின் தேவைகளை பூர்த்தி செய்வதில் பெரிதும் உதவியாக உள்ளது.
கன்னியாகுமரி நகர நிருபர் செய்லிஸ்
