Headlines

நாகர்கோவில்: எவர்கிரீன் ரோட்டரி – குமரி மாவட்ட காவல் துறை இணைந்து பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாகர்கோவில்: எவர்கிரீன் ரோட்டரி – குமரி மாவட்ட காவல் துறை இணைந்து பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாகர்கோவில் எவர்கிரீன் ரோட்டரி சங்கமும், கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையும் இணைந்து, பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்த சிறப்பு நிகழ்ச்சியை எஸ்.எம்.ஆர்.வி. ஐ.டி.ஐ வளாகத்தில் நடத்தினர்.

அச்சங்கத்தின் தலைவர் சுபா செந்தில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் இரா. ஸ்டாலின், ஐ.பி.எஸ். அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. மதியழகன் மற்றும் AHTU விங் அதிகாரி தாமஸ் லைஸா ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு விரிவான விழிப்புணர்வு உரையாற்றினர்.

பெண்கள் பாதுகாப்பின் அவசியம், சட்ட ரீதியான பாதுகாப்பு நடவடிக்கைகள், போதைப்பொருளின் தீமைகள், இளம்பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அவர்கள் விளக்கமாக எடுத்துரைத்தனர்.

தேசிய அளவில் மற்றும் மாநில அளவில் சிறந்து விளங்கிய 4 மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தொழிற்கல்வி நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் சி.ஆர். பிரமிளா, ரோட்டரி சங்க செயலாளர் ஆண்டின் விஜிலா, துணை ஆளுநர் தட்சிணாமூர்த்தி, கேப் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரெனின், நிமிர் குழுவின் ஜெயந்தி, ஆஷா பிரியா, சுமதி, ஆசிரியர்கள், இருநூறுக்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த தமிழக விடியல் குமரி மாவட்ட தலைமை நிருபர் பாவலர் ரியாஸ் மற்றும் சமூக ஆர்வலர் சுதாமதி ஆகியோருக்கு ஏற்பாட்டுக் குழுவினர் நன்றி தெரிவித்து பாராட்டினர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *