நாகர்கோவில், ஏப் 04:
நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி வளாகத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து, அவர்களுக்கு ஆதரவாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சுரேஷ் ராஜன், மனோ தங்கராஜ் மற்றும் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமோகமான திரள் மக்கள் பங்கேற்றதால், ஸ்காட் வளாகம் முழுவதும் மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது.
உற்சாக கோஷங்களும், ஆதரவு முழக்கங்களும் இடம் பெற்றதால் அரங்கமே அதிர்ந்தது.
தமிழக விடியல் செய்திகளுக்காக குமரி மாவட்ட தலைமை நிருபர் பாவலர் ரியாஸ்.
