தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொள்ளாச்சி அடுத்து சின்னம்பாளையம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் மக்களுக்கான பல்வேறு சேவைகள் பட்டா மாறுதல், மின்சார இணைப்பு, மற்றும் ஆதார் திருத்தல், சேவைகளை நேரடியாக மக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை மாவட்ட செயலாளர் இல.பத்மநாதன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.
மேலும் கமலக்கண்ணன் தெற்கு மத்திய ஒன்றிய செயலாளர்,சந்திரசேகர் தெற்கு மத்திய துணை ஒன்றிய செயலாளர், கானியப்பன் வடக்கு ஒன்றிய செயலாளர், KS தனசேகர் தலைமை செய்குழு உறுப்பினர், யுவராஜ் ஆனைமலை ஒன்றிய செயலாளர், மற்றும் வட்டாட்சியர், மாக்கினாம்பட்டி முத்து ஆகியோர் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டனர்.
பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள் நேரடியாக பயன்பெறும் வகையில் இந்த முகமானது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஐந்து பயனாளிகளுக்கு இல பத்மநாதன் மாவட்ட செயலாளர் அவர்கள் நேரில் சந்தித்து கருத்து கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் முகமில் கலந்து கொண்டனர்.
