Headlines

“முதலமைச்சர்” கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வரிசையில் மாநில அளவில், கல்லூரி மாணவிகளுக்காக நடைபெற்ற, 400 மீட்டர் நீச்சல் போட்டியில் வெற்றி பெற்று, “முதல் இடம்” பிடித்த, திருநெல்வேலி மாணவி! நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்த, மாவட்ட ஆட்சித்தலைவர்!

"முதலமைச்சர்" கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வரிசையில் மாநில அளவில், கல்லூரி மாணவிகளுக்காக நடைபெற்ற, 400 மீட்டர் நீச்சல் போட்டியில் வெற்றி பெற்று, "முதல் இடம்" பிடித்த, திருநெல்வேலி மாணவி! நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்த, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி,அக்.15:-

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள், ஒவ்வொரு பிரிவிலும் தனித்தனியாக, மாநிலத்தில் மொத்தம் 11மாவட்டங்களில் நடைபெற்றன.

இந்த விளையாட்டுப் போட்டிகளின் வரிசையில்,கல்லூரி மாணவிகளுக்காக, மாவடட அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற, பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரி மாணவி மு. ஹிதாயா பவ்ஸியா, மாநில அளவில் நடைபெற்ற, 400 மீடடர் நீச்சல் போட்டியில் பங்கேற்று, “வெற்றி” பெற்று “முதல் இடம்” பிடித்து, திருநெல்வேலி மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.

அவருக்கு தங்கப்பதக்கம் மற்றும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை ஆகியன, பரிசாக வழங்கப்பட்டன. இன்று (அக்டோபர். 15) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்ட மாணவி ஹிதாயா பவ்ஸியா, தான் பெற்ற தங்கப்பதக்கம், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை ஆகியவற்றை, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமாரிடம் காண்பித்து, தன்னுடைய மகிழ்ச்சியை அவருடன் பகிர்ந்து கொண்டார்.

மாவட்ட ஆட்சிதலைவர் சுகுமார், மாணவி ஹிதாயா பவ்ஸியாவை, மனமுவந்து பாராட்டியதுடன், இதயப்பூர்வமான வாழ்த்துகளையும், தெரிவித்துக் கொண்டார்.

“இனிவரக்கூடிய காலங்களில், தேசிய மற்றும் உலக அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேற்று, சாதனைகள் புரிந்து திருநெல்வேலி மாவட்டத்துக்கு, புகழ் சேர்க்க வேணடும்!”- என்று மாவட்ட ஆட்சித்தலைவர், வலியுறுத்தினார்.

அப்போது, பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ந. வேங்கடப்பன், உடற்கல்வி இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் ஜெ.ராம் ஆகியோர், உடனிருந்தனர்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *