புளியங்குடி- சிந்தாமணியில் நேற்று மாலை பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோவும், அரசு பஸ்ம் நேருக்கு நேர் மோதியதில் ஆட்டோ டிரைவர் பரிதாபமாக உயிர் இழந்தார். மாணவர்கள் படுகாயமடைந்து சிகிட்சை பெற்று வருகின்றனர் .
சிந்தாமணி டோல்கேட் பகுதியில் நேற்று மாலை4 மணி அளவில் பள்ளி மாணவர்களை ஏற்றி கொண்டு வந்த ஆட்டோவும் மதுரையில் இருந்து செங்கோட்டை செல்லும் அரசு பேருந்தும் திடீரென நேருக்கு நேர் மோதியது இதில் ஆட்டோ அப்பளம் போல நொறுங்கி விட்டது ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் . ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டு இருந்த டிஎன் புதுக்குடி உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் சிந்தாமணி சான்றோர் மடத்து தெருவை சேர்ந்த அருள் மகன்கள் ரோகன் [11] ரோகித் [ 10] மற்றும் அதே பகுதியை சேர்ந்த துரைசாமி மகள் மாணவி ராகிஷா [ 9] ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புளியங்குடி இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் போக்குவரத்தை சரி செய்து ஆம்பூலன்ஸ வாகனம் மூலமாக மாணவி ராகிஷாவை மேல் சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மாணவர்கள் இருவரும் சிந்தாமணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் மற்றும் வாசுதேவநல்லூர் தீ அணைப்பு துறையினர் சேர்ந்து இடிபாடுகளுக்கு இடையே சிக்கி இருந்த ஆட்டோ டிரைவர் செல்வக்குமார் உடலை பொதுமக்கள் உதவியுடன் ஆட்டோவை உடைத்து வெளியில் எடுத்து புளியங்குடி அரசு மருத்ததுவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த விபத்தினால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்தது கடுமையாக பாதிக்கப்பட்டது. பேருந்தை ஒட்டி வந்த கடையநல்லூர் கண்மணியாபுரத்தை சேர்ந்த பரமசிவன் மகன் சந்திரசேகரனை [54] புளியங்குடி இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் விசாரணை செய்து வருகின்றார்.