ஆக் 31, கன்னியாகுமரி :
குமரி மாவட்டம் குளச்சல் அருகே நடந்த வியப்பூட்டும் சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வார இறுதி கொண்டாட்டத்தின் போது ரூ.500 பந்தயத்திற்காக ஒரு முழு புல் பாட்டில் மதுபானத்தை ஒரே மூச்சில் குடித்ததாகக் கூறப்படும் சுபின் (40) எனும் கொத்தனார் திடீரென மயங்கி சரிந்து விழுந்தார்.
அவர் உயிரிழந்ததாக எண்ணிய நண்பர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சுபின் இன்னும் உயிருடன் இருப்பதைக் கண்டு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பினர். தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி நகர நிருபர் : செலிஸ்
