திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் சிறப்பு கல்வி மையத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்க்கொண்டார்,

அப்போது சிறப்பு கல்வி மையத்தில் பயிலும் மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி அவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்ககள், அமைச்சரிடம் மாதனூர் வட்டாரத்தில் இங்கு மட்டுமே இந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி மையம் இருப்பதாகவும், 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் குழந்தைகளை இங்கு அழைத்து வருவதாகவும், அதனால் மாணவர்களை அழைத்து வர போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்ற கோரிக்கை விடுத்தனர், அதனை தொடர்ந்து இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.

ஆய்வின் போது ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.சி.வில்வநாதன் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
