Headlines

பரபரப்பு விபத்து – கன்னியாகுமரியில் இருவர் பலி.

பரபரப்பு விபத்து – கன்னியாகுமரியில் இருவர் பலி

செப் 12 கன்னியாகுமரி

கன்னியாகுமரி ரயில்வே நிலையம் முன்பு பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் துயரச் சம்பவம் நடந்தது.

மது போதையில் ஜேசிபி வாகனத்தை கட்டுப்பாட்டை இழந்து தாருமாறாக ஓட்டிய ஓட்டுநர், சாலையில் சென்றவர்களை மோதி விபத்து ஏற்படுத்தினார். இதில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

உயிரிழந்தவர்களில் ஒருவர், கன்னியாகுமரி பேரூராட்சி பகுதி தமிழக வெற்றிக்கழக நிர்வாகி முஹம்மது ஷான், மற்றொருவர் அப்பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி நகர நிருபர் செய்லிஸ்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *