Headlines

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டில் மாட்டுக்கொழுப்பு சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டதால், அதற்கு பரிகாரமாக சிறப்பு தோஷ நிவாரண சாந்தி யாகம் நடத்தும் அர்ச்சகர்கள்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டில்

காலை 6 மணி முதல் தலைமை அர்ச்சகர் ராமகிருஷ்ண தீட்சிதர், 8 அர்ச்சகர்கள், 3 ஆகம ஆலோசகர்கள் தலைமையில் யாகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த யாகத்தில் வைக்கப்பட்டுள்ள புனித நீரை லட்டு, பிரசாதம் தயாரிக்கும் மடப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் தெளிப்பதன் மூலம் தோஷங்கள் நிவர்த்தி அடையும் என செயல் அதிகாரி ஷியாமளா ராவ் தெரிவித்துள்ளார்.

எட்டினால் குடிமியை பிடி
இல்லையேல் காலைப்பிடி
இது அவாள் தத்துவம்.!

அந்த அடிப்படையில் தற்போது லட்டுக்கு யாகம் செய்து புனித நீர் தெளிக்கிறார்கள்.
வேத காலத்தில் பிராமணர்கள் அசைவம் சாப்பிட்ட ஏராளமான செய்திகள் ரிக் வேதத்தில் உள்ளன.
இந்தியாவில் பௌத்தம் தலை தூக்கிய போது அவர்கள் அகிம்சையை கடைப்பிடித்தனர். பௌத்த மதம் வெகு வேகமாக பரவ ஆரம்பித்தவுடன் அதை கண்டு வெகுண்டு எழுந்த பார்ப்பனர்கள் பௌத்தத்திற்கு ஊடுருவி அதை இரண்டாக பிரித்தனர் மகா யானம் ஹீன யானம் என இரு பிரிவாக பிரித்தனர். பழைய பௌத்த கருத்துக்களை கொண்ட மக்களை ஹீனர்கள் என்று வகைப்படுத்தினார். இன்றும் கிராமங்களில் ஈனப்பயல் என்ற சொல் இருப்பதற்கு அதுவே காரணம்.! பௌத்தத்திற்குள் ஊடுருவிய பார்ப்பனர்கள் மகாயான பிரிவாக இருந்து ஒட்டுமொத்தமாக பௌத்தத்தை அழித்தனர் என்பதுதான் வரலாறு. அவர்கள் தேவைக்கு தக்கவாறு சாங்கியம் , தோஷம் நீக்குதல் என பல்வேறு பரிகாரங்களை செய்து கொள்வார்கள் இது காலம் காலமாக வரலாற்றில் நடந்து வரும் உண்மை அதன் ஒரு கட்டம்தான் இப்போது லட்டுக்கு தீர்த்தம் தெளிப்பது போன்ற சம்பிரதாயங்கள் நடத்தப்படுகின்றன. இவர்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நமக்கு ஈரோட்டு கண்ணாடி தேவை.!

தென்றல் ஆ.சேகர்
திராவிட இயக்க ஆய்வாளர் உடுமலைப்பேட்டை

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *