Headlines

கோவை கெம்பட்டி பகதியில் களைகட்டிய “திராவிடப் பொங்கல் விழா”…

கோவை கெம்பட்டி பகதியில் களைகட்டிய "திராவிடப் பொங்கல் விழா"...

கோவையில் களைகட்டிய “திராவிடப் பொங்கல் விழா” கோவை மாநகர் மாவட்டம் கெம்பட்டி பகுதியில் மாநகர் மாவட்டம் பொறுப்பாளர் தலைமையில் “திராவிடப் பொங்கல் விழா”

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு கெம்பட்டி பகுதி 80வது வார்டில் உள்ள மைதானத்தில், பகுதி பொறுப்பாளர் என்.ஜே.முருகேசன் ஏற்பாட்டில், 80வது வார்டு மாமன்ற உறுப்பினரும் பொது சுகாதார குழு தலைவர், கோவை மாநகர் மாவட்டம் வர்த்தகர் அணி அமைப்பாளர் பெ.மாரிசெல்வன் முன்னிலையில், கோவை மாநகர் மாவட்டம் பொறுப்பாளர் துரை.செந்தமிழ் செல்வன் தலைமையில் “திராவிடப் பொங்கல் விழா நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக மாநில மாணவர் அணி செயலாளர் இரா.ராஜீவ் காந்தி கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மாநில மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி மற்றும் கோவை மாநகர் மாவட்டம் பொறுப்பாளர் துரை.செந்தமிழ் செல்வன் ஆகியோர், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பொங்கல் வழங்கிச் சிறப்புரையாற்றினார்.

​அவர் பேசுகையில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெறும் ‘திராவிட மாடல்’ ஆட்சி, சாதி, மத பேதங்களைக் கடந்து அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் சமத்துவ ஆட்சியாகத் திகழ்கிறது.

மகளிருக்கு உரிமைத் தொகை, மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் என இந்தியாவின் முன்னோடி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியே காரணம்.

இந்த பொங்கல் விழா, அத்தகைய நல்லாட்சியை மக்கள் கொண்டாடும் விழாவாக அமைந்துள்ளது,” என்று திமுக ஆட்சியின் சிறப்புகளைப் பாராட்டிப் பேசினார்.

இப்பொங்கல் விழாவில் கோவை மாநகர் மாவட்ட துணை செயலாளர் கோட்டை அப்பாஸ், மாநில தொழிலாளர் அணி இணை செயலாளர் LPF தமிழ்ச் செல்வன், மற்றும் கழக நிர்வாகிகள், அனைத்து அணி நிர்வாகிகள் திரளான பொதுமக்கள் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.

கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *