உடுமலை
நவம்பர் 19.
திருப்பூர் மாவட்ட சிலம்பாட்ட கழகம் மற்றும் உடுமலை ஜீவா சிலம்பம் அசோசியேசன் இணைந்து மண்டல அளவிலான தனித்திறன் சிலம்பாட்டப் போட்டிகள் உடுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் ஒற்றைக்கம்பு,சிலம்பம் சுற்றும் முறை, இரட்டைக் கம்பு சிலம்பம் சுற்றும் முறை, என்ற பிரிவுகளில் ஐந்து வயது முதல் 16 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவ மாணவியர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் ஒற்றைக்கம்பு சுழற்றும் பிரிவில் ஆர் ஜி எம் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவி ஸ்வஸ்திகா முதல் இடத்தையும் ஒன்றாம் வகுப்பு மாணவி நைனிகா இரண்டாம் இடத்தையும் பிடித்து தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றனர்.
இந்தவிழாவில் திருப்பூர் மாவட்ட சிலம்பாட்ட கழக பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன். ஜீவா சிலம்பாட்ட கழக ஆசான் நந்தகோபால் ஜீவா சிலம்பாட்ட கழக முதன்மை பயிற்சியாளர் சென்னியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.
