நாகர்கோவிலில் அம்பேத்கர், காமராஜர், பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதிய 3 மாவட்ட செயலாளர்கள் மற்றும் மகளிர் விடுதலை இயக்க மாநில துணைச் செயலாளர் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று மாலை நாகர்கோவில் நகரில் அண்ணல் அம்பேத்கர், கர்மவீரர் காமராஜர் மற்றும் பெரியார் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வீரவணக்கம் முழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் நாகர்கோவில் மாநகர தொகுதி மாவட்ட செயலாளர் டாக்டர் ஷேக் முகமது, குளச்சல் தொகுதி மாவட்ட செயலாளர் சுபாஷ், கிள்ளியூர் தொகுதி மாவட்ட செயலாளர் அட்வ. ஷிபு, கன்னியாகுமரி தொகுதி மாவட்ட செயலாளர் கோபி பேரர்வாளன், பத்மநாபபுரம் தொகுதி மாவட்ட செயலாளர் மேசியா, உழவுங்கோடு தொகுதி மாவட்ட செயலாளர் தேவகி, மகளிர் விடுதலை இயக்க மாநில செயலாளர் கலைச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுடன் கன்னியாகுமரி மண்டல செயலாளர் பாஸ்கர் பகலவன், துணைச் செயலாளர்கள் திருமாவேந்தன், மாத்தூர் ஜெயன், டேவிட், மேரி ஆகியோர் முன்னிலையில் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும், தலைவர் திருமாவளவனின் அன்புத் தம்பிகள் என அழைக்கப்படும் பெருந்திரளான சிறுத்தைகள் கலந்து கொண்டு ஆரவாரத்துடன் புதிய பொறுப்பாளர்களை உற்சாகப்படுத்தினர். நிகழ்வு முழுவதும் எழுச்சியும் உற்சாகமும் நிறைந்த சூழலில் நடைபெற்றது.
தமிழக விடியல் குமரி மாவட்ட தலைமை நிருபர் பாவலர் ரியாஸ்.
