வாணியம்பாடி,நவ.20- திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்பாகராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா ஆகியோர் உத்தரவின் பேரில் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பண்ணூர் கூட்டு சாலையில் வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் விஜய்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் வெங்கட் ராகவன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஞானதி ஆகியோர் தலைமையில் அதிகாரிகள்
வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது தலை கவசம் இல்லாமல் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்தவர்கள், எதிர் திசையில் வாகனங்களை ஓட்டி வந்தவர்கள், அதிவேகமாக வாகனங்களை ஓட்டிச்சென்றவர்கள், இருசக்கர வாகனங்களில் அதிக ஆட்கள் அமர வைத்து வந்தவர் ஆகியோரை போக்குவரத்து மற்றும் காவல் துறை அதிகாரிகள் நிறுத்தி அறிவுரை வழங்கியும், தலைகவசம் அவசியத்தை எடுத்து கூறியும், சாலையில் மெதுவாக செல்ல வேண்டும்,சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்று அறியுறுத்தினர்.
மேலும் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்தவர்களுக்கு அதிகாரிகள் மலர்களை வழங்கி வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.
நாளை முதல் தலைகவசம் இல்லாமல் இருசக்கர வாகனங்களை இயக்குபவர்கள், எதிர் திசையில் வாகனங்களை இயக்குபவர்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்குபவர்கள் மீது உரிய அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தனர்.
அப்சர் மர்வான் திருப்பத்தூர் மாவட்டம்