மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற
பாவூர்சத்திரம் ஒளவையார் பள்ளி மாணவிகளை முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் பாராட்டி ஊக்கத்தொகை வழங்கினார்.
இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமம் சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி சிவகங்கையில் நடைபெற்றது.
இந்த போட்டியில் தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் ஒளவையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவிகள் சந்தியா மற்றும் யோக தர்ஷினி ஆகியோர் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் போட்டியிட்டு வெற்றி பெற்று, முதலிடம் பிடித்துள்ளனர்.
இம் மாணவிகள் டிசம்பர் மாதம் 11-ந்தேதி முதல் 17-ந் தேதி வரை பஞ்சாப்பில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
சாதனை படைத்த மாணவிகள் இருவரையும் முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ. சிவபத்மநாதன் நேரில் அழைத்து பாராட்டி, திமுக சார்பில் ஊக்கத்தொகை வழங்கினார் .
அப்போது,முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் எஸ் .ஆர் ., பால்துரை, மாணவிகளின் பெற்றோர்களான கராத்தே ஆசிரியர்கள் சிவபிரகாஷ் (தென்காசி மாவட்ட கராத்தே அசோசியேஷன் தலைவர்) மற்றும் சங்கீதா சிவபிரகாஷ் (திருநெல்வேலி அரசு மாடல் பள்ளி பயிற்சியாளர்) , முத்துகுமார், உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.