கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் நடைபெற்ற 2024 -2025 ஆண்டிற்கான கலைத் திருவிழா வட்டார நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை தொகுதியை சார்ந்த அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்து ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளின் கலை, மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வட்டார வளமையம் மேற்பார்வையாளர் சக்திவேல் வரவேற்பு உரையாற்றினார் சிறப்பு விருந்தினராக உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கணன் அவர்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து சிறப்பு உரையாற்றினார் மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் ரேணுகோபால், சரியான நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு துணைத் தலைவர் வைத்தியநாதன் அப்பல்லியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிவராஜ் மற்றும் ஆசிரியர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர் இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சரஸ்வதி அவர்கள் நன்றி உரை வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் : விஜயகாந்த்