Headlines

விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் முதன்முறையாக போதை வஸ்துக்களை கண்டறிய புதிய பஸ்டர் மோப்ப நாய் பதவி ஏற்றுக்கொண்டது.

விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் முதன்முறையாக போதை வஸ்துக்களை கண்டறிய புதிய பஸ்டர் மோப்ப நாய் பதவி ஏற்றுக்கொண்டது.

இது குறித்து விழுப்புரம் மாவட்ட எஸ்.பி சரவணன் கூறியதாவது விழுப்புரம் மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில் இயங்கி வரும் மோப்பநாய் படை பிரிவில் குற்ற சம்பவத்தை மோப்பமிடவும் (தமிழ்), நாச வேலை செயல்களை மோப்பமிடவும் (ராணி) தனித்தனியாக மோப்ப நாய்கள் பணிப்புரிந்து வரும் நிலையில் மாவட்டத்தில் முதன்முறையாக போதை வஸ்துக்களை கண்டறிய பிரத்தியேகமாக ஒரு வருட கால பயிற்சி அளிக்கப்பட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி பஸ்டர் என்ற மோப்ப நாய் போதை வஸ்துகளை கண்டறியும் பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் நகரத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை அடையாளம் காணவும், வாகன ஓட்டிகளை கண்காணிக்கவும், மூன்றாம் கண் எனப்படும் கண்காணிப்பு கேமராக்கள் விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை இந்திரா நகரிலிருந்து மேற்கு காவல் நிலைய நான்கு முனை சந்திப்பு, விழுப்புரம் பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம், பானாம்பட்டு சந்திப்பு வழியாக கோலியனூர் – கும்பகோணம் சாலை நான்கு முனை சந்திப்பு வரை (10 KM), விழுப்புரம் அண்ணாமலை ஹோட்டல் புறவழிச்சாலையிலிருந்து புதிய பேருந்து நிலையம், தந்தை பெரியார் நகர் வழியாக ஜானகிபுரம் புறவழிச்சாலை வரை (8 KM), மொத்தம் 18 கி.மீ தொலைவில் 14 அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கண்காணிப்பு கேமராக்கள் உட்பட 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் நகரத்தில் நடைபெறும் சம்பவங்களை தொடர்ந்து கண்காணிக்க மேற்கண்ட இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு காவல் கட்டுப்பாட்டு அறையில் மாவட்ட காவல் துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட உள்ளது. இன்று (டிச.30) சிசிடிவி கண்காணிப்பு காவல் கட்டுப்பாட்டு அறை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல்ரகுமான், விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் ஈ.எஸ்.உமா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோர்களால் திறந்து வைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.

விழுப்புரம் நகரத்தை 24 மணி நேர சிசிடிவி கண்காணிப்பு நகரமாக மாற்ற காவல் துறைக்கு உறுதுணையாக இருந்த மகாலட்சுமி குழுமத்தினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் தினகரன், இளமுருகன் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் க.நந்தகுமார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *