திருநெல்வேலி,நவ.5:-நெல்லை மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில், இன்று [நவ.5] மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் கூட்டம் நடைபெற்றது. மேயர் கோ.ராமகிருஷ்ணன் நேரடியாக பங்கேற்று, மாநகர மக்களிடமிருந்து, மனுக்களை பெற்றார்.
பாதாளச்சாக்கடை கழிவுநீர் மூடியின் மேற்பாகம் வழியாக கழிவுநீர் வெளியேறுவதை தடுத்து நிறுத்த வேண்டும்! பொது நல்லியில் அடைப்பை நீக்கி, சீரான குடிநீர் விநியோகம் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்! கழிவுநீர் தடுப்பு சுவற்றினை, இன்னும் 2 அடி உயர்த்த வேண்டும்! ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும்! சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்! சிதைந்து கிடக்கும் தகனமேடையை சரிசெய்து தர வேண்டும்!- உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள், இந்த கூட்டத்தில் அந்தந்த பகுதி மக்களிடமிருந்து, பெறப்பட்டன. “பெறப்பட்ட மனுக்கள் யாவும் முறையாக பரிசீலிக்கப்பட்டு, அதன் அடிபாபடையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்!”- என, மேயர் ராமகிருஷ்ணன், உறுதி அளித்தார். கூட்டத்தில் மேயருடன், மண்டல உதவி ஆணையர்கள் ஜான் தேவசகாயம், சுகிபிரேமலா, நாராயணன், உதவி செயற்பொறியாளர் அலெக்சாண்டர், மாநகர நல அலுவலர் [பொறுப்பு] அரசகுமார் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள், கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.