திருநெல்வேலி, ஜூன்.23:-
திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம், “அரசு” கிளை நூலகத்தில், “தாமிரபரணி வாசகர் வட்டம்” மற்றும் “தேசிய வாசிப்பு இயக்கம்” ஆகியவற்றின் சார்பில், தமிழக அரசின் “தூய தமிழ் பற்றாளர் விருது” பெற்ற கவிஞர் ந.ஜெயபாலன் மற்றும் சிறந்த மொழிபெயர்ப்புக்காக “சாகித்திய அகாதமி” விருது பெற்ற பேராசிரியை ப.விமலா ஆகிய இருவருக்கும் பாராட்டு விழாவும், அவர்கள் எழுதிய நூல்களுக்கு திறனாய்வு நிகழ்ச்சியும், நேற்று [ஜூன்.22] ஞாயிற்றுக்கிழமை மாலையில், நடைபெற்றன.
வாசகர் வட்டத்தலைவர் “முனைவர்” க.சரவணகுமார், அனைவரையும் வரவேற்று, பேசினார். பேராசிரியர் வ.ஹரிஹரன், கவிஞர் “பாப்பாக்குடி” இரா. செல்வமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர் தேசிய வாசிப்பு இயக்கத் தலைவர் “லயன்” சு.தம்பான் தலைமை வகித்தார். “பூவின் மொழி” எனும் நூலை, கவிஞர் தி. காந்திமதி வேலன் மற்றும் செல்வி காயத்ரி ஆகியோரும், “எனது ஆண்கள்” எனும் நூலை, “புதுமைப்பித்தன்” பிரம்மநாயகமும் திறனாய்வு செய்தனர். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் பிரியதர்ஷினி, இளங்கோமணி, கவிஞர்கள் ந.சுப்பையா, கோதை மாறன், பிரபு, தியாகராஜன், மாணிக்கவாசகம், எழுத்தாளர்கள் தளவாய், “காயல்” அருள், சண்முகம் ஆகியோர், “வாழ்த்துரை” வழங்கினர். விருது பெற்றோர் “ஏற்புரை” நிகழ்த்தினர். நினைவு பரிசுகள், நூல்கள் வழங்கப்பட்டன. “அரசு” கிளை நூலகர் ம.அகிலன் முத்துகுமார், அனைவருக்கும் “நன்றி” கூறினார்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.
