ஆக்கிரமிப்பை அகற்ற முடியாது., வீட்டின் உரிமையாளர் பரமசிவம் அதிகாரிகளுடன் வாக்குவாதம்.
நெய்காரபட்டி பேரூராட்சி 10-வது வார்டு பகுதியில் வசித்து வருபவர் பரமசிவம். இவருடைய வீட்டிற்கு முன்பாக செல்லும் கழிவுநீர் சாக்கடை கால்வாயை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அடைத்து வைத்ததால் கழிவுநீர் வழிந்து சாலை முழுவதும் தேங்கி நிற்பதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் பரமசிவம் என்பவரிடம் பேரூராட்சி தலைவர் கருப்பாத்தாள் , வார்டு கவுன்சிலர்கள் நேரில் சென்று சாக்கடை கழிவுநீர் வாய்க்காலை அடைத்து கட்டியுள்ள சுவற்றை அகற்றுமாறு கூறியுள்ளனர். இதற்கு முன்பு இருந்த பேரூராட்சி ஆணையரிடம் லஞ்சம் கொடுத்து சாக்கடை கழிவுநீர் எனது வீட்டின் முன்பாக செல்லக்கூடாது என்பதற்காக அடைத்து வைக்க அனுமதி பெற்று வந்துள்ளேன். எனவே கட்டியுள்ள சுவற்றை அகற்று முடியாது. நிர்வாகம் ரீதியாக என்ன நடவடிக்கை எடுத்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்பதாக பரமசிவம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுகையில் 10-வது வார்டு பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவுநீரை முறையாக அப்புறப்படுத்த வசதி இருந்தும். கழிவுநீரை அப்புறப்படுத்த விடாமல் தடுப்பு சுவர் எழுப்பி தனிநபர் தனது கட்டுப்பாட்டுக்குள் எப்படி வைக்க முடியும். இந்த வழியாக செல்லக்கூடிய பொதுமக்கள் சாக்கடை கழிவுநீரை மிதித்து செல்வதால் பல்வேறு சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு , நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் இதுசம்பந்தமாக நெய்காரபட்டி பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. பொதுமக்களுக்கு இடையூறாகவும், நோய் தொற்று ஏற்படுத்தும் வகையில் தெருவில் தேங்கியுள்ள சாக்கடை கழிவுநீரை அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதாக கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் பேரூராட்சி தலைவர் , சம்பந்தப்பட்ட வார்டு கவுன்சிலர் , நிர்வாக ஆணையர் ஆகியோர் உடனடியாக இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பார்களா என்பதே இப்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.
நமது நிருபர்