திருநெல்வேலி, ஜூலை.4:-
திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில், இன்று [ஜூலை.4] மாலையில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 17-வது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.

இந்த விழாவில், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும், மாணவ- மாணவிகள் மொத்தம் 170 பேருக்கு,”விலையில்லா” சீருடைகள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. திருவள்ளுவர் தெருவில் வைத்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, எஸ்.டி.பி.ஐ. கட்சியின், நகர தலைவர் நிஜாம் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் நியாஸ், அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட பொதுச் செயலாளர் எம்.எஸ். சிராஜ், நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.
மாவட்ட அமைப்பு செயலாளர் “முல்லை” மஜீத், நகர நிர்வாகிகள் முகம்மது அலி, முகம்மது ஆதம், கலீல் ரகுமான், ரவி, முகம்மது ரஜப், செய்யது அப்துல் கரீம் , முகம்மதுஅலி, ஆகியோர் முன்னிலை வகித்தனர், புறநகர் மாவட்ட தலைவர் எம்.கே பீர்மஸ்தான், மாவட்ட துணை தலைவர் என்ஜினியர் “களந்தை” மீராசா , பேரூராட்சி மன்ற தலைவி பார்வதி மோகன், அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர்- ஆசிரியர் சங்கத் தலைவர் குமார் ஆகியோர், வாழ்த்துரை வழங்கினர். மூலைக்கரைப்பட்டி காவல் ஆய்வாளர் ராஜகுமாரி, உதவி ஆய்வாளர் பார்த்தீபன், டாக்டர்.மாணிக்க வாசகம், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசியை லதா ராணி, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை கதீஜா மெகர் பானு, எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர்கள் “கல்லிடை” சுலைமான், “அம்பை” ஜலீல், மாவட்ட பொருளாளர் “ஏர்வை” இளையாராஜா,ஆட்சிக்குழு உறுப்பினர் தவ்பீக், எஸ்.டி.பி.ஐ.கட்சியின் மகளிர் பிரிவான “விமன் இண்டியா மூவ்மெண்ட்” அமைப்பின், மாவட்ட தலைவி மும்தாஜ் ஆலிமா, “வழக்கறிஞர்” முகம்மது ஷபி, மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி 7-வது வார்டு கவுன்சிலர் கொம்பையா, வியாபாரி சங்கத் தலைவர் சத்யசீலன், வட்டார மருத்துவ அலுவலர் அர்ச்சனா,ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி பெற்றோர் -ஆசிரியர் சங்கத்தலைவர் மகாராஜன், “நாம் தமிழர்” கட்சி நிர்வாகி ஆனந்த குமார், “மக்கள் நீதி மையம்” கட்சி நிர்வாகி செல்வக்குமார், ஆசிரியர் வடுக நாதன், தொழில் அதிபர்கள் சரவணன், சாகுல்அமீது ஆகியோர், “சிறப்பு” அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, உரையாற்றினர். நிறைவாக, கட்சியின் நகர செயலாளர் சேக், அனைவருக்கும் “நன்றி” கூறினார்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.
