தென்காசி ஜனவரி 5
தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 2.43 லட்சம் மதிப்புள்ள 343 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
தென்காசி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா ஆகியவற்றின் புழக்கத்தை முற்றிலும் தடுக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G.S. மாதவன் Tps உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று (05.01.2026) குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இலஞ்சி பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தியதில் இலஞ்சி ராமசாமி பிள்ளை தெருவை சேர்ந்த மரியதாஸ் என்பவரின் மகன் ரவி @ ரவி ராஜ பாண்டியன் (வயது 45) என்பவர் பதுக்கி வைத்திருந்த 343 கிலோ எடை கொண்ட ரூ. 2.53 லட்சம் மதிப்பிலான அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, ரவியை கைது செய்து, வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த உள்ளனர். மேலும் புகையிலை பொருட்கள் எங்கிருந்து வாங்கிவரப்பட்டது குறித்தும், இதில் தொடர்புடையவர்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் புதியதாக பதவியேற்றது முதல் ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் காவல்துறை கண்காணிப்பாளர் GS மாதவன் அவர்களை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இளைஞர்களை குறி வைத்து போதைகளுக்கு அடிமையாக்கும் இதுபோல உள்ள செயல்களை முறியடிப்பதில் தீவிரம் காட்டும் காவல்துறைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
மாவட்ட செய்தியாளர்: முகமது இப்ராகிம்.
