கோவை(18.12.25)
அகில இந்திய BSNL மற்றும் DOT ஓய்வூதியர் சங்கத்தின் (AIBDPA) 5-வது அகில இந்திய மாநாடு, கோயம்புத்தூர் மாதம்பட்டியில் உள்ள லோட்டஸ் மஹாலில் டிசம்பர் மாதம் 17, 18, தேதிகளில்திரு, T. K. ரங்கராஜ் அவர்களின் அவர்களின் வரவேற்பு உரையுடன் தொடங்கியது.

அறிமுக உரையை திரு,K. G ஜெயராஜ் ஜெனரல் செகரட்டரி அவர்கள் வழங்கினார். பின்னர் பேசியவர்கள் ஓய்வூதியர் பரிசீலனை, 8-வது ஊதியக் குழு (8th CPC TOR) மற்றும் தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகள் (Labour Codes) ஆகியவற்றைக் கண்டித்து பேசினார்கள்.

விழாவில் இந்தியா முழுவதும் வந்திருந்த நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கழுடன் விழா இனிதே நிறைவடைந்தது.
கோவைமாவட்ட செய்தியாளர் – சம்பத்குமார்
